பணமதிப்பு நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோபியில் தமிழக காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது
கடந்த நவம்பர் மாதம் இதே நாளான நவம்ர் 8ம் திகதி இந்தியாவில் .500 மற்றும் 1000 ரூபா தாள்கள் செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. இந்தப் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி, தொழில் முடக்கம், வேலை இழப்பு உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டதாக காங்கிரஸ், தி.மு.க. மற்றும் தேசிய அளவிலான எதிர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது. எனவே இன்று நவம்பர் 8ம் திகதியை தேசிய அளவில் கறுப்பு தினமாக எதிர் கட்சிகள் அறிவித்திருந்தன. இதை கண்டித்து தமிழகத்தில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கருப்பு தினமாக அறிவித்து போராட்டங்களை நடத்தி வருகிறன.
இந்தநிலையில் தி.மு.க. தலைமை நிலைய செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் இன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட தி.மு.க. செயலாளருமான முத்துசாமி மற்றும் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தெண்டர் என பல பலர் கலந்து கொண்டனர். அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.