இந்தியாவில் புடவை, விவசாய உளவு இயந்திரம் உள்ளிட்ட 177-க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு GST வரியினைக் குறைக்க இன்றைய ஜிஎஸ்டி அமைப்புக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான வரி விகிதங்களை குறைக்க வாய்ப்பு:
Nov 10, 2017 @ 03:45
டெல்லியில் இன்று நடைபெறவுள்ள ஜிஎஸ்டி அமைப்புக்குழுக் கூட்டத்தில் பல்வேறு பொருட்களுக்கான வரி விகிதங்களை குறைக்கவும், வர்த்தகர்களுக்கு சலுகைகள் அறிவிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை முதலாம் திகதி அமுப்பபடுத்தப்பட்டது. இதன்மூலம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் விதிக்கப்படுகிறது. இந்த வரி விதிப்பால் உற்பத்தியாளர்கள், தொழில் முனைவோர், நுகர்வோர் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பொருளாதார மந்தநிலையும் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சிறு தொழில்களுக்கு குறைவான ஜிஎஸ்டி வரி விகிதம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என அமைச்சரவை குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
இந்நிலையில் ஜிஎஸ்டி அமைப்புக்குழுவின் 23வது கூட்டம் ; இன்று நடைபெறுகிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் சிறு வர்த்தர்கள் பயன்பெறும் வகையில் சலுகை அறிவிப்புகள் இடம் பெற வாய்ப்புள்ளதுடன் மக்கள் அதிகஅளவில் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதம் கணிசமாக குறைக்கப்படும் என தெரிகிறது.