குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…
முல்லைத்தீவு மாங்குளம் புதிய கொலனியில் தனிநபர் ஒருவர் நாற்பது ஏக்கர் வரையான காணியினை அடாத்ததாகப் பிடித்து வேலி அமைத்து வருவது தொடர்பாக இக்கிராம பொது அமைப்புகள் பலத்த எதிர்ப்பினைத்தெரிவித்து வருகின்றன. முல்லைத்தீவு மாவட்டத்திலே மீள் குடியமர்ந்துள்ள மக்களில் காணியற்ற குடும்பங்களுக்கு அரை ஏக்கர் வீதம் காணி வழங்கப்படும் நிலையில் தனிநபர் ஒருவர் எவ்வாறு நாற்பது ஏக்கர் வரையான காணியினை அடாத்தாகப் பிடித்து வேலி அமைக்க முடியும் எனவும் இக்காணி கூட அரச காணி எனத் தெரிவிக்கும் பொது அமைப்புகள் குறித்த நபரின் செயற்பாட்டினைத் தடுத்து நிறுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சட்ட நடைமுறைகளுக்கப்பால் தனிநபர் ஒருவர் பெருமளவுக் காணியினை கையகப்படுத்த முயல்வதன் பின்னணியில் அரசியலா அல்லது அதிகாரிகளின் துணையா உள்ளனரா எனவும் மாங்குளம் பொது அமைப்புகள் வினா எழுப்பியுள்ளன
தனிநபர் அடாத்தாகக் காணி பிடிப்பதற்கு எதிராக அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்காவிட்டால் மாங்குளம் பொது அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடாத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றன.