வெளிநாடு வாழ் இந்தியர்கள் வாக்களிக்கும் வகையில் விரைவில் எளிதான கொண்டு வரப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் லட்சக்கணக்கான இந்தியர்கள் வாழ்ந்து வரும் போதிலும் அவர்களில் 10,000 முதல் 12,000 வரையிலான இந்தியர்கள் மட்டுமே அங்கிருந்து வந்து வாக்களிப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஏனையோர் பல்வேறு காரணங்களால் வாக்களிக்க முடியாத நிலைய காணப்படுகின்றது. அவர்கள் வாக்களிப்பதனை இலகுபடுத்தும் வகையில் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர 2015-ம் ஆண்டு தேர்தல் ஆணையம் சட்ட முன் வரைபு ஒன்ழறை மத்திய சட்ட அமைச்சுக்கு அனுப்பியது.
எனினும் இந்த விவகாரம் குறித்து கடந்த ஜனவரியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவுகள் எவையும் எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்தநிலையில் சிலர் உச்சநீதிமன்றில் பொதுத்தேர்தலின்போது, இந்திய தூதரகம் மூலமோ, அஞ்சல் மூலமோ, இணையதளம் வழியாகவோ தங்கள் வாக்குரிமையை செலுத்த அனுமதிக்க உத்தரவிட வேண்டும் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், இதுகுறித்து பதில் அளிக்குமாறு மத்திய அரசு மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் நீதிமன்றம் கோரியிருந்த நிலையில் தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் சமர்ப்பித் அறிக்கையிலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்தப் பணிகளை மேற்கொள்வதற்கு 12 வாரம் அவகாசம் அளித்து உத்தரவிட்டனர