159
புதிய அரசியல் அமைப்பை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் முயற்சித்தால் லட்சக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும் என எல்லே குணவங்ச தேரர் தெரிவித்துள்ளார். மாத்தறையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளர்h.
புதிய அரசியல் அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டு காணி உரிமை வழங்கப்படும் பட்சத்தில் திருகோணமலை உள்ளிட்ட கடல் மற்றும் நில வளங்களை இழக்கும் நிலை ஏற்படும் எனத் தெரிவித்த அவர் புதிய அரசியல் அமைப்பினை எரித்து நாசமாக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love