Home இலங்கை குறைபாடு உள்ள அரசியல் தீர்வை ஏற்க முடியாது. – சி.வி:-

குறைபாடு உள்ள அரசியல் தீர்வை ஏற்க முடியாது. – சி.வி:-

by editortamil

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

அரசாங்கம் தருகின்றார்கள் என்பதற்காக, தருவதை தரட்டும் என குறைபாடு உள்ள தீர்வினை பெற்றுக்கொள்ள முடியாது. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் யாழ்.பொது நூலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இணைத்தலைவர்களான வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் , மருத்துவர் எஸ்.லக்ஸ்மன் மற்றும் வ.வரதராஜா நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் , ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி , சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட தமிழ் மக்கள் பேரவையினர் கலந்து கொண்டு இருந்தனர். குறித்த கூட்டத்தின் முடிவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

குறைபாடு உள்ள அரசியல் தீர்வை ஏற்க முடியாது.

குறைப்பாடு உள்ள அரசியல் தீர்வை தமிழ் தேசிய கூட்டமைப்பு தற்காலத்தில் பெற்றுக்கொண்டால் அதில் இருந்து என்றென்றைக்கும் நாங்கள் விடுபட முடியாது. அரசாங்கம் தருவதை தரட்டும் நாங்கள் எங்களின் அடிப்படை உரிமையில் இருந்து விடுபடவில்லை எனும் கொள்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை வெளிப்படுத்த வேண்டும் நாங்கள் அனைவரும் சேர்ந்து குறைபாடு உள்ள குறைந்த தீர்வினை பெற்றுக்கொண்டால் , வருங்கால சந்ததி அதனால் மிகவும் பாதிப்படைய போகின்றது.

தற்காலத்தில் கூட வடமாகணத்தில் மக்கள் தொகையில் மாற்றங்களை ஏற்படுத்த பலரும் பல பிரயத்தனங்களை ஏற்படுத்திக்கொண்டு இருக்கின்றார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் குறைபாடு உள்ள தீர்வினை உள்ளூராட்சி தேர்தலில் தகமையுடையோர் நிறுத்தப்பட வேண்டும்.

உள்ளூராட்சித் தேர்தலில் நல்ல தகமையுடையவர்களைக் கொண்டுவரப்பட வேண்டும். அதற்காக கட்சிக்காக உழைப்பவர்கள், தங்களுடன் சேர்ந்திருப்வர்களை மாத்திரம் சேர்க்காமல், அந்தந்த துறைகளில் தகுதியுடையவர்களைச் சேர்க்க வேண்டும். என்னனென்ன குணாம்சம் ஒரு தவிசாளருக்கு இருக்க வேண்டுமோ அவற்றை கொண்டவரையே அந்தப் பதவிக்கு நியமிக்க வேண்டும். அதனைவிடுத்து கட்சி ரீதியாக தமக்குத் தேவையானவர்களை மாத்திரம் எடுக்க கூடாது.

இளைஞர்கள் இளம் பெண்களில் படித்த பட்டதாரிகளை வேட்பாளர்கள் பட்டியலுக்குள் உள்வாங்கவேண்டும்.  சில பேச்சாளர்கள் பேசும் போது, “தகுதியுடைவர்களை மாத்திரம் ஏற்றுக்கொள்ளாது தமிழ் மக்களின் அடிப்படை உரித்துகளை ஏற்றுக்கொண்டவர்களை தேர்தலில் நிறுத்த வேண்டும்” என்று தெரிவிக்கின்றார்கள்.எந்த கட்சி தேர்தலில் நின்றாலும் தகுதி உடையவர்கள் உள்வாங்கப்பட வேண்டும்.

கூட்டமைப்பில் இருந்து விலகுவது நல்லதல்ல. கூட்டமைப்பில் இருந்து வெளியே செல்வது நல்ல விடயமல்ல. அதனுடன் சேர்ந்து பயணிப்பதே நல்லது. தமிழ் மக்கள் பேரவை அரசியல் கட்சி ரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்க போவதில்லை. மக்கள் இயக்கமாகவே அது தொடர்ந்து செயற்படும் என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

1 comment

Karunaivel Ranjithkumar November 12, 2017 - 11:08 am

iT’s appreciable northern provincial council CM vigneswaran made a comment over welcoming those university gradutes would took up the Sri Lankan political governance wheel in their hands rather encouraging those money motivated swelled illiterate folks to be in the Sri Lankan parlimentary system at large in more towards local govarnance .

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More