175
யாழ்.மீசாலை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் ஒருவர் உயிரிழந்து உள்ளார். மீசாலை புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள புத்தூர் சந்தி பகுதியில் உள்ள புகையிரத கடவையினை மோட்டார் சைக்கிளில் கடக்க முற்பட்ட ஒருவரே புகையிரதத்துடன் மோதுண்டு உயிரிழந்து உள்ளார். மீசாலை புகையிரத விபத்தில் உயிரிழந்தவர் சாரதியாக கடமையாற்றும் கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியை சேர்ந்த 38 வயதுடைய தெய்வேந்திரம் ஞானயுகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
Spread the love