164
தெய்வங்களுக்குத்தான்
பல கால்கள்
பல கைகள்
சிவனுக்கு மூன்று கண்கள்
எனக்கு மூன்று கால்கள்
ஆனாலும்
ஒரு பாதணி போதும்
எனினும்
இரண்டு கால்கள் உள்ளவர்கள் பயணிக்கும்
தூரத்தையும் வேகத்தையும்
நான் தாண்டுவேன்.
இங்கெதுவும் நடக்கவில்லை
என அவர்கள் சொல்லக்கூடும்
எல்லாவற்றுக்குமான பதிலாய்
இந் நிலத்தில் நான் நடப்பேன்.
வரிகள்: தீபச்செல்வன்
புகைப்படம்: குளோபல் தமிழ் செய்தியாளர்
Spread the love