இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்பில் ராணுவத்தின் இருவர் உயிரிழந்துள்ளனர். இன்று காலை ரடிணுவத்தினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது சக்திவாய்ந்த குண்டு வெடித்ததாகவும் அதில் 2 ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 6 பேர் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கட்டுள்ளது. இந்தியா-மியான்மர் எல்லைக்கு அருகில் நடைபெற்ற இந்த சம்பவத்தினை தொடர்ந்து மீட்புக் குழுவினவும் மீட்பு பணிக்கு ஹெலிகொப்டர்களும் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பினர் பாதுகாப்பு படையினரை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
மணிப்பூரில் குண்டுவெடிப்பு ராணுவத்தினர் பலி:-
150
Spread the love