இணையத்தள குற்றங்களை தடுக்க 1200 தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு இந்திய மத்திய அரசு பயிற்சி அளிக்கவுள்ளது. கடந்த மே மாதம் பிரித்தானியா பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் இடம்பெற்ற இணையதளக் குற்றத்தால் சுமார் 10 லட்சம் கணினிகள் ஒரே நேரத்தில் பாதிக்கப்பட்டன. இதுபோன்ற குற்றங்கள் இந்தியாவிலும் அதிகரித்து வருகின்ற நிலையில் இதைச் சமாளிக்க மத்திய அரசு அனைத்து தரப்பின் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக தேசிய அளவில் இணையத்தள பாதுகாப்பு மிக்க இந்தியா என்ற திட்டத்தை விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த திட்டத்ததிற்காக தகவல் தொழில்நுட்ப பெருநிறுவனங்களின் உதவியை மத்திய அரசு நாட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இணையத்தள குற்றங்களை தடுக்க தகவல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பயிற்சி..
157
Spread the love