156
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் 8 பேர் வரவுசெலவுத்திட்டத்தினை எதிர்த்து வாக்களிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள 2018ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. இந்தநிலையிலேயே அவர்கள் எதிர்த்து வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை இது தொடர்பிலான விசேட கூட்டமொன்று, எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில், இன்று காலை இடம்பெற்றுள்ளது. வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு, இன்று மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love