159
காலி ஹிந்தொட்ட பகுதியில் முஸ்லீம்களின் வீடுகள், கடைகள் மீது கும்பல் கும்பல் ஒன்று மேற்கொண்ட தாக்குதல் சம்பவங்களினால் குறித்த பிரதேசங்களில் பதட்டம் ஏற்பட்டது.
காலி ஹிந்தொட்ட பகுதிக்கு வெளியிடங்களில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை இரவு வந்த கும்பல் ஒன்று முஸ்லீம் மக்களின் வீடுகள் மற்றும் கடைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர். அத்துடன் அப்பகுதியில் இருந்த பள்ளி வாசல் மீதும் தாக்குதல்களை மேற்கொண்டனர்.
குறித்த தாக்குதல் சம்பவங்களினால் முஸ்லீம் மக்கள் காயமடைந்தனர். அதனால் இன முறுகல் ஏற்பட்டு சிங்கள முஸ்லீம் மக்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது. குறித்த பிரதேசத்தில் பதட்டம் ஏற்பட்டதை அடுத்து ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டு உள்ளது. குறுந்துவத்தை, மஹ ஹபுகல, வெளிப்பிட்டி மோதர, உக்வத்தை, ஹிந்தொட்ட மற்றும் பியன்டிகம கிராம சேவையாளர் பிரிவு பகுதிகளில் பொலிசாரினால் ஊரடங்கு சட்டம் அமுலுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
ஊரடங்கு சட்டம் நாளை சனிக்கிழமை காலை 09 மணி வரை அமுலில் இருக்கும் என பொலிசாரால் அறிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் குறித்த பிரதேசங்களில் மேலதிக போலீசார் குவிக்கப்பட்டு நிலைமைகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love