சீனாவின் திபெத் பகுதியில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று காலை திபெத்தின் நிஞ்சியா பகுதியில் இருந்து சுமார் 58 கி.மீ. தொலைவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள கட்டிடங்கள் கடுமையாக ஆடியதனைத் தொடர்ந்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதன்பின்னர் அதே பகுதியில் பீமீண்டும் 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்ற நிலையில் நிலநடுக்கங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.