கடலோர காவல்படையினரால் துப்பாக்கி சூட்டுக்குள்ளாகிய மீனவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தமிழக மீனவர்கள் மீது கடலோர காவல்படையினர் நடத்திய துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டகளுக்கு ழப்பீடு வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பில் சென்னை உயர்நீதிமன்றில் மீனவர் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த எல்.டி.ஏ.பீட்டர் ராயன் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். குறித்த மனுவில் கடந்த 13ம் திகதி ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 6 மீனவர்கள் அவர்கள் இந்திய கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது, அங்கு வந்த இந்திய கடலோர காவல்படையினர் மீனவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர் எனவும் இதில் பிச்சை என்ற மீனவரின் இடது கையில் காயம் ஏற்பட்டதெனவும் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் குறித்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம் துப்பாக்கி சூடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் பாதிக்கப்பட்டகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.