பிலிப்பைன்ஸ் கடல் பகுதியில் சரக்கு கப்பல் மூழ்கி ஒரு மாதமாகியும், கப்பலில் பணியாற்றிய 6 தமிழர்கள் உள்ளிட்ட 10 இந்தியர்களின் நிலை குறித்து தெரியவில்லை என அவர்களது குடும்பத்தினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
டுபாயின் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான, எமரால்ட் ஸ்டார் என்ற சரக்கு கப்பல், இந்தோனேசியாவில் இருந்து நிக்கல் தாதுவை ஏற்றிக்கொண்டு சீனாவுக்கு சென்று கொண்டிருந்தது. அதில் 26 இந்தியர்கள் பணியாற்றியிருந்தநிலையில் கப்பல் பிலிப்பைன்ஸ் எல்லையில் இருந்து சுமார் 280 நாட்டிகல் மைல் தூரத்தில் கடலில் மூழ்கியது.
இந்தநிலையில் ஜப்பான் கடலோரக் காவல் படையினருக்கு கிடைமத்த தகவல்களுக்கமைய 16 பேர் மீட்கப்பட்டனர். ஏனையவர்கள் குறித்த தகவல்களே இதுவரை வெளியாகவில்லை என கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது