326
ஈழத்து இசையமைப்பாளர் திருமலை ரீ.பத்மநாதன் காலமானார். ஈழத்தின் திருகோணமலையைச் சேர்ந்த ரீ. பத்மநாதன் இலங்கை வானொலி மெல்லிசைப் படால்கள் மூலம் கவனத்தை ஈர்த்தவர்.
1964ஆம் ஆண்டில் திருகோணமலை இசைக்கழகம் என்ற இசைக்குழுவை நிறுவிய இவர் ஈழக் கலைஞர் ஏ. ரகுநாதன் அவர்கள் தயாரித்து நடித்த நிர்மலா திரைப்படத்துக்கு இசை அமைத்துள்ளார்.
திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சில்லையூர் செல்வராசான் எழுதிய “கண்மணி ஆடவா ..“ என்ற பாடல் (https://www.youtube.com/watch?v=9MmnlgjcI-0) மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பாராட்டைப் பெற்றது. இதேவேளை தென்றலும் புயலும் என்ற ஈழத்துத் திரைப்படத்துக்கும் இவர் இசையமைத்துள்ளார். கர்நாடக,மேலைத்தேச இசைஞானம் உடைய இவரது பாடல்கள் ஈழ மண்வாசம் கொண்டவையாக மதிக்கப்படுகின்றது.
Spread the love