குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
யாழில். அண்மைக்காலத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு
சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் 81 பேர் கைது செய்யப்பட்டதாக யாழ்.மாவட்ட பிரதி காவல்துறை மா அதிபர் ரொசான் பெனார்ன்டோ தெரிவித்துள்ளார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் கடந்த நாட்களில் காவல்துறையினரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது சந்தேகத்தில் 81 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் நீதிமன்றில் முற்படுத்தியதாகவும் நீதிமன்றினால் 75 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர் எனவும் ஏனைய 6 பேரும் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளர்h.
அதேவேளை குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து 7 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டு இருந்தன எனவும் அவைகள் அனைத்தும் காவல் நிலையங்களில் தடுத்து வைக்கபட்டு உள்ளன எனவும் அவர் தெரிவித்தார்
தொடர்ந்தும் காவல்துறையினர் வாள் வெட்டு சம்பவங்களை கட்டுபடுத்தும் நோக்குடன் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர் எனவும் தற்போது வாள் வெட்டு சம்பவங்களை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம் எனவும் மேலும் தெரிவித்தார்.