தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, சவூதி அரேபியாவில் இருந்தவாறு பதவி விலகிய லெபனானின் பிரதமர் சாத் அல்- ஹரிரி மீண்டும் நாடு திரும்பியுள்ளார். அவர் லெபனான் நேரில் வந்து தனது பதவி விலகல் கடிதத்தை வழங்கும்வரை அவரது பதவி விலகலை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என லெபனான் ஜனாதிபதி மிசேல் ஓன் தெரிவித்திருந்தார். இந்தநிலையில் லெபனான் சென்ற ஹரிரியை ராணுவத்தினர் பெய்ரூட் சர்வதேச விமானநிலையத்தில் வரவேற்றுள்ளனர்.
ஈரானுடனான பிராந்திய அதிகாரப் போட்டி காரணமாக சவூதி அரேபியாதான் அவரைப் பதவி விலகுமாறு வற்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்டிருந்தமைய மறுத்த ஹரிரி ஹிஸ்புல்லா அமைப்பே காரணம் எனவும் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது