சோமாலியாவின் தலைநகரான மொகடி அருகே தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டள்ளது.
சோமாலியாவின் பல பகுதிகளில் இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலான ஆட்சியை நிறுவ வேண்டுமெனத் தெரிவித்து அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு தீவிரவாதக் குழுக்கள் பல இயங்கி வருகின்றன.
இந்நிலையில், சோமாலிய தலைநகர் மொகடிக்கு அருகே அமைந்துள்ள தீவிரவாதிகள் முகாம் மீது நேற்றையதினம் சோமாலிய ராணுவத்துடன் இணைந்து அமெரிக்கா ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க கூட்டுப்படையினர் தெரிவித்துள்ளனர்.