Home இந்தியா “எல்லா வடிவங்களிலான தீவிரவாதத்தினை ஒழிக்க உறுதியேற்போம்”

“எல்லா வடிவங்களிலான தீவிரவாதத்தினை ஒழிக்க உறுதியேற்போம்”

by editortamil


எல்லா வடிவங்களிலான தீவிரவாதத்தினை ஒழிக்க உறுதியேற்போமென இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளர்h. மும்பை தீவிரவாத தாக்குதலின் 9-வது ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி தனது ருவிற்றர் பக்கத்தில் அவர் இதனைப் பதிவு செய்துள்ளார். மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தில் அமெரிக்கா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாட்டவர் உள்பட 166 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையிலேயே மும்பை தீவிரவாத தாக்குதல் நினைவு தினத்தினை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மும்பை தாக்குதலில் 9-வது ஆண்டு நினைவு தினத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். தீவிரவாதத்திற்கு எதிரான போரில் பாதுகாப்பு அதிகாரிகளும் உயிர்தியாகம் செய்துள்ளனர். இந்த நாளில் அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தினை ஒழிக்க உறுதியேற்போம், நம்முடைய மக்கள், நாடு, உலகம் பாதுகாப்பாக இருக்க உறுதியேற்போம் என பதிவிட்டுள்ளார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More