114
சிலியிலுள்ள நுபல், மவுலி ஆகிய இரு மாகாணங்களில் கடந்த சில நாட்களாகக் காட்டுத்தீ மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த இரு மாகாணங்களிலும் 15 இடங்களில் காட்டுத்தீ வேகமாகப் பரவிவருகிறது.
காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தத் தீயணைப்புப் படையினர் மிகத் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனால், இந்த இரு மாகாணங்களிலும் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டதுடன், பாதுகாப்பான இடங்களிற்குச் செல்லுமாறு மக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
அதேவாளை, நாசகார நடவடிக்கையாக இந்தக் காட்டுத்தீயைப் பற்ற வைத்த குற்றச்சாட்டில் இதுவரை 60 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Spread the love