நாடளாவிய ரீதியில் முன் அறிவித்தல் இன்றி இன்று முற்பகல் திடீர் மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. பாணந்துறை துணை மின்நிலையத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக நாடளாவிய ரீதியில் திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த மின்தடை காரணமாகக் கிளிநொச்சி பொது வைத்தியசாலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், அங்குள்ள மின்பிறப்பாக்கியும் இந்தத் திடீர் மிந்தடையின்போது இயங்காத நிலையில் இருந்திருக்கிறது. இதனால், பல்வேறு சிகிச்சைப் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கிளிநொச்சி வைத்தியசாலை நோயாளர்கள் பல்வேறு இடர்களை எதிர்கொள்வதாக மேலும் தகவல் வெளியாகியுள்ளது.