முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் நேற்றுப் (13) பிற்பகல் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா, உதய கம்மன்பில, நிமல் லன்சா, ராஜித சேனாரத்ன, ருவன் விஜேவர்தன, சாகல ரத்நாயக்க மற்றும் மேலும் பலர் இணைந்துக்கொண்டுள்ளனர்.
சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.