மீன்பிடிச் சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் மீனவர்கள் தொடர்ந்தும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக்கி வருவதாக வட மாகாண மீனவ பிரதிநிதி நா.வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார். நேற்றுச் சனிக்கிழமை (15/2/2025) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மீன்பிடிச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமல் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்ந்தும் மீன்பிடி விடயத்தில் இடம்பெற்று வருகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. கடல் அட்டைப் பண்ணை அமைப்பதற்கு யாருக்காவது அனுமதி வழங்கப்படுகின்ற போது உரிய ஆய்வுகளுக்கு உட்படுத்தி வழங்கப்பட வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.