திருப்பூரில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த பீகாரைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒடிசா மாநிலத்தில் இருந்து பனியன் நிறுவனத்தில் வேலை தேடி திருப்பூருக்கு நேற்று முன்தினம் இரவு தொடருந்தில் கணவன், மனைவி வந்துள்ளனர். இவர்கள் இரவில் எங்கு செல்வது என தெரியாமல் நின்றுள்ளனர்.
அப்போது அங்கு வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது நதிம்(வயது 24), முகமது டேனிஸ்(25) மற்றும் முகமது முர்சித்(19) ஆகியோர் பனியன் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சுமி நகர் பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் வைத்து கத்தியைக் காட்டிக் கணவரை மிரட்டி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட வடமாநில பெண் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் முகமது நதிம், முகமது டேனிஸ் மற்றும் முகமது முர்சித்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒடிசாவில் இருந்து வேலை தேடி வந்த பெண்ணுக்குப் பீகாரைச் சேர்ந்த 3 பேர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.