தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.அரசியல் நோக்கங்களுடன் தேசிய பாதுகாப்பு தொடர்பாக சில தரப்பினரால் வெளியிடப்படும் அறிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையில் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் அவர் பொதுமக்களுக்கு உறுதியளித்தார். அரசாங்கத்தை சீர்குலைக்கும் நோக்கில், எதிர்க்கட்சி உறுப்பினரால் இதுபோன்ற கூற்றுக்கள் கூறப்பட்டன என்றும் அவர் கூறினார்.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய முப்படைகளும் இலங்கை காவல்துறையும் தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.