நாட்டில் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிடும் எனத் தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். வடமராட்சி ஊடக மையத்தில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (25/02/2025) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, உள்ளூராட்சிசபைத் தேர்தலில், நாம் ஏற்கனவே எடுத்துக்கொண்ட தீர்மானத்திற்கமைவாக தனித்துப் போட்டியிடுவோம். சபைகளில் ஆட்சி அமைக்கும்போது, கூட்டாக ஆட்சி அமைக்க முடியும். இது தொடர்பாக எமது கட்சித் தலைவர் தமிழ்த் தேசியக் கட்சிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.