ரஸ்யாவுக்கு வடகொரியா கூடுதல் இராணுவ வீரர்களை அனுப்பியுள்ளது. ரஸ்யா-உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ள ஐரோப்பிய நாடுகளின் ஆயுத வழங்கல் மற்றும் பொருளாதார உதவியால் போரில் உக்ரைன் தொடர்ந்து தாக்குப்பிடித்து நிற்கிறது. அதேபோன்று ரஸ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ஆதரவாகச் செயற்படுகிறது.
அதன் ஒருபகுதியாக வடகொரியா சுமார் 10 ஆயிரம் இராணுவ வீரர்களை ரஸ்யாவுக்கு அனுப்பியிருந்தது. அவர்கள் உக்ரைன் எல்லை அருகே உள்ள குர்ஸ்க் பிராந்தியத்தில் நிறுத்தப்பட்டிருந்தனர்.
எனினும் கடுமையான பனி மற்றும் உக்ரைனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அவர்களில் பலர் உயிாிழந்துள்ளனா். . இந்தநிலையில் ரஸ்யாவுக்கு கூடுதல் ராணுவ வீரர்களை வடகொரியா அனுப்பி இருப்பதாகத் தென்கொரிய உளவு நிறுவனம் தெரிவித்துள்ளது.