வடமேற்குப் பாகிஸ்தானில் உள்ள ஒரு இராணுவத் தளத்தில் இரண்டு தற்கொலைக் குண்டுதாக்குதல்கள் இன்று (05/03/2025) இடம்பெற்றுள்ளன. குண்டுத்தாக்குதலாளிகள் சுவரை உடைத்துத் தாக்கியுள்ளன. அதற்குள் மற்ற தாக்குதல்காரர்கள் வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் முயற்சியை மேற்கொண்டபோது அது தடுத்து முறியடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில் குறைந்தது 12 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள பன்னுவில் நடந்த இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு தலிபான்களுடன் தொடர்புடைய ஒரு குழு பொறுப்பேற்றுள்ளதுடன் மேலும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் பலர் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது.
இராணுவத் தரப்பினர் உடனடியாக எந்த உயிரிழப்புகளையும் உறுதிப்படுத்தவில்லை. ஆனால் பன்னு மாவட்ட மருத்துவமனை வட்டாரங்கள் குறைந்தது ஒரு 12 பேர் இறந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
பரந்த இராணுவப் பகுதியின் சுவருக்கு அருகில் இரண்டு தற்கொலைக் குண்டுதாரிகளும் தங்களை வெடிக்கச் செய்ததாகப் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு பாதுகாப்பு அதிகாரி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

