Home இலங்கைமருத்துவமனைகள் மீது குண்டுவீசப்பட்டதை ஏற்றுக்கொண்ட ரணில்

மருத்துவமனைகள் மீது குண்டுவீசப்பட்டதை ஏற்றுக்கொண்ட ரணில்

by editorenglish

யுத்தத்தில் சிக்குண்ட மக்களுக்கான மனிதாபிமான உதவிகள்  தடுக்கப்பட்டன. மருத்துவமனைகள் மீது விமானக்குண்டு வீச்சு இடம்பெற்றது எனத் தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எனினும் இது திட்டமிடப்பட்ட முறையில் பெருமளவில் இடம்பெறவில்லை எனத் தெரிவித்துள்ளார்.  அல்ஜசீராவிற்கான பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்

2009ம் ஆண்டு முடிவிற்கு வந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி வழங்கப்பட்டுவிட்டதா என மெஹ்டி ஹசன் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்குப் பதிலளித்துள்ள ரணில்விக்கிரமசிங்க எந்த சமூகத்திற்கும் இதுவரை நீதி வழங்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

யுத்தத்தில் சிக்குண்டிருந்தவர்களிற்கான மனிதாபிமான உதவி  தடுக்கப்பட்டது, மருத்துவமனைகள் மீது குண்டுவீச்சு இடம்பெற்றது என தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ஆனால் இது திட்டமிடப்பட்ட விதத்தில் முன்னெடுக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

விமானப்படை விமானங்கள் மருத்துவமனைகள் மீது குண்டுவீசிய தருணங்கள் உள்ளன, இதற்காக  அவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ள ரணில் விக்கிரமசிங்க ஆனால் இது பெருமளவில் இடம்பெற்றதா? நான் அப்படிச் சொல்ல மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள மெஹ்டி ஹசன் ஐக்கியநாடுகளின் குழு இலங்கை படையினர் யுத்தத்தில் சிக்குண்டவர்களிற்கான மனிதாபிமான உதவிகளை தடுத்தனர் என குறிப்பிட்டுள்ளனரே எனக் கேள்வி எழுப்பியுள்ளார். நான் அது இடம்பெற்றது என நினைக்கின்றேன் என அவ்வேளை எதிர்கட்சித் தலைவராகயிருந்த ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More