மத்திய தரைக்கடல் பகுதியில் இத்தாலி கடற்படையினர் மேற்கொண்ட மீட்பு நடவடிக்கையின் போது 5 பேரின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளதுடன் 300 பேர் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளில் நிலவி வரும் பதற்றமான சூழல் காரணமாக அங்கிருந்து மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு 5 படகுகளில் இந்த மக்கள் புலம்பெயர்ந்து செல்லும் வேளையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாகவும் இத்தாலி மற்றும் ஐரீஸ் நாடுகளின் கடற்பரடயும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் மட்டும் இத்தாலியில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் சுமார் 3ஆயிரத்து 626 பேர் இந்த பயணங்களின் போது உயிரிழந்துள்ளனர் எனவும் ஐ.நா. தகவல்கள் தெரிவிக்கன்றன.