சிரியாவின் அலெப்போவில் ரஷியாவால் ஒரு மனதாக அறிவிக்கப்பட்ட மூன்று நாள் போர் நிறுத்தம் நிறவுக்கு வந்ததனை அடுத்து அங்கு மீண்டும் கடுமையான மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எல்லைப்பகுதிகளை அண்மித்த பல பகுதிகளில் மோதல்கள் மற்றும் பீரங்கி தாக்குதல்கள் நடைபெற்றதாகவும் போராளிகளின் கைவசமுள்ள பகுதிகளிலேயே தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும் விமானத்தாக்குதல்கள் ரஸ்ய விமானங்களினாலா அல்லது சிரிய விமானங்களினாலா நடத்தப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
தமது பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து எந்த உறுதியும் அளிக்கப்படவில்லை என்பதால், போர் நிறுத்தத்தின் போது, கிளர்ச்சியாளர்களின் கைவசமுள்ள பகுதிகளிலிருந்து மக்களை வெளியேற்ற முடியவில்லை என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.