குளோபல் தமிழ்ச் செய்தியாளர்-
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் நிலையைப் பொறுப்பதிகாரியாக இருந்து இடமாற்றம் பெற்று வேறொரு பொலிஸ் நிலையத்திற்கு செல்கின்ற பொலிஸ் உப பரிசோதகர் டிஎம் சத்துரங்கவுக்கு தர்மபுரம் கிராமமக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று மாலை நான்கு மணிக்கு தர்மபுரம் பொதுநோக்குமண்டபத்தில் பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது
மண்டப முன்றலில் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வில் இடம்மாற்றம் பெற்றுச் செல்கின்ற பொழில் அதிகாரி சத்துரங்கவுக்கு ஆலய நிர்வாகத்தினர், பொதுமக்கள், பொழு அமைப்புக்கள், கிராம அலுவலர்கள் எனப் பலர் நினைவுக் சின்னங்களையும் வாழ்த்து அட்டைகளையும் வழங்கினர்
இதன்போது கருத்துத் தெரிவித்த மக்கள், தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக இருந்து பல சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தியது மட்டுமல்லாது சமூகத்துடன் சேர்ந்து பல சமூகப்பணிகளையும் அறப்பணிகளையும் செய்த இவரை வாழ்த்தி விடைகொடுப்பதொடு தற்பொழுது பதவி ஏற்றிருக்கின்ற பொறுப்பதிகாரி இவரைப்போல் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்
இன் நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம அலுவலர்கள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள், மக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர் அத்துடன்
கிளிநொச்சியில் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கிராமமக்கள் பொது அமைப்புக்கள் ஆலய பரிபாலன சபையினர் கிராம அலுவலர்கள் எனப் பலரும் இணைந்து ஒரு ஒரு பிரியாவிடை நிகழ்வினை நடத்தியமை இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.