Home இலங்கைசமூக பிறழ்வுகளை கட்டுப்படுத்தவும் இளைஞர்கள் கூட்டாக முன்வரவேண்டும் -சீ.வீ.கே:-

சமூக பிறழ்வுகளை கட்டுப்படுத்தவும் இளைஞர்கள் கூட்டாக முன்வரவேண்டும் -சீ.வீ.கே:-

by editortamil

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

சனசமூக நிலையங்களில் இளைஞர்கள் கூட்டாக செயல்படுவது போன்று சமூக பிறழ்வுகளை கட்டுப்படுத்தவும் இளைஞர்கள் கூட்டாக முன்வரவேண்டும் என வட மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

கைதடி மத்தி குமரநகர் சனமூக நிலையத்தின் 61வது ஆண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

சனசமூக நிலையங்களில் இளைஞர்கள் கூட்டாக செயல்படுவது மகிழ்சியை தருகின்றது. எனினும் எமது பிரதேசத்தின் ஒரு பகுதி இளைஞர்கள் வழிதவறி போவது மிகவும் கவலை தரும் விடயமாக இருக்கின்றது. குறிப்பாக மதுப்பாவனை,போதைபொருள் பாவனைகள் எமது சமூகத்துக்குள் உள்வாங்கப்பட்ட காரணத்தினால் சில இளைஞர்கள் வழிதவறி போகின்றார்கள் இதனால் சமூகத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றது.

சனமூக நிலையங்களில் இளைஞர்கள் கூட்டாக ஒற்றுமையாக செயல்படுகின்றீர்கள் இது வரவேற்தக்கது. இவ்வாறு நீங்கள் கூட்டாக இணைந்து கைதடியை போதைபொருள்,மதுப்பாவனை இல்லாத கிராமமாக உருவாக்க வேண்டும்.

இவ்வாறு நீங்கள் முன்மாதிரியாக செயல்படுவதன் மூலம் இதே மாதிரியான நிலைப்பட்டை ஏனைய கிராமங்களில் உள்ள சனசமூக நிலையங்களை சேர்ந்த இளைஞர்களும் முன்னெடுப்பார்கள்.இவ்வாறு ஒவ்வொரு கிராமங்களிலும் போதைபொருள்,மதுப்பாவனைகளை இல்லாமல் செய்வதன் மூலம் சமூக பிறழ்வு பாதிப்புகளில் இருந்து நாங்கள் விடுபடலாம். இதற்கு கைதடி இளைஞர்கள் முன்மாதிரியாக செயல்படவேண்டும் என நான் கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு முன்மாதிரியாக செயல்படுவதன் மூலம் மது பாவனை இல்லாத போதைப்பொருள் இல்லாத சட்டத்தை மதிக்கின்ற சமூகத்தை உருவாக்கலாம் என்றார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More