Home இலங்கைபோராட்டம் மேற்கொள்வதற்கு நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்றுள்ள யாழ் காவல்துறையினர்

போராட்டம் மேற்கொள்வதற்கு நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்றுள்ள யாழ் காவல்துறையினர்

by editortamil


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றையதினம்  யாழப்பாணத்துக்கு  சென்றுள்ள  நிலையில், போராட்டம், வன்முறைகளை தூண்டும் வகையில் செயற்படுபவர்களை கைது செய்வதற்கும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்காதவாறும், யாழ்ப்பாண காவ்லதுறையினர்  நீதிமன்ற தடை உத்தரவைப் பெற்றுள்ளனர்.

இதற்கமைய, யாழ்ப்பாணத்துக்கு அருகில், யாழ். இந்துக் கல்லூரி, யாழ் ஆளுநர் காரியலயத்துக்கு அருகில் எவ்வித எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும் மேற்கொள்ள முடியாதவாறு,  இந்த  நீதிமன்றத் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளது.

இதேவேளை, எம்.கே..சிவாஜிலிங்கம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஸ் பிரேமசந்திரன் உள்ளிட்ட அரசியல்வாதிகளும்  போராட்டங்களில்  பங்கேற்க முடியாதவாறு தடையுத்தரவு பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More