Home இலங்கைகைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இலங்கையை சென்றடைந்தார் கோட்டாபய:-

கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இலங்கையை சென்றடைந்தார் கோட்டாபய:-

by editortamil

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

எனினும் அவர் கைது செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. கடந்த அரசாங்க காலத்தில் மெதமுலன பிரதேசத்தில் டீ.ஏ. ராஜபக்‌ அருங்காட்சியகம் மற்றும் நினைவகம் அமைக்கப்பட்ட போது அரச நிதி தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்த திட்டத்தின் போது, இலங்கை காணி மீட்பு மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான சுமார் 90 மில்லியன் ரூபா நிதி தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More