கிளிநொச்சி அக்கராயன் மற்றும் வட்டக்கச்சி பிரதேசங்களில் வைத்தியசாலைகளில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத் தொகுதிகள் நேற்று(20) வடக்கு மாகாண சுகாதார அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
வைத்தியசாலைக்கான உபகரணங்கள் உள்ளிட்ட 64 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்ட புதிய கட்டிடத் தொகுதியே திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதன் போது கருத்து தெரிவித்த வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் குணசீலன் பிரதேச வைத்தியசாலைகளின் தேவைகள் தொடர்பில் அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடி அமைச்சர் என்ற வகையில் என்னால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொள்வேன். அத்தோடு இப்பிரதேசங்களுக்கு வைத்தியர்கள் மற்றும் ஏனைய வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்ற முன்வரவேண்டும் என்றும் குறிப்பிட்டாா்.
இந்தநிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினா்களான அரியரத்தினம், பசுபதிபிள்ளை மற்றும் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் பணிப்பாளர் சி. மைதிலி மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்துகொண்டனர்