தாஜ்மகாலுக்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்ட 100 காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால் குறித்து அண்மைக் காலங்களில் சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ள நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தாஜ்மகால் இந்திய கலாச்சாரத்தின் சின்னம் அல்ல என தெரிவித்திருந்த அதேவேளை உத்தரபிரதேச மாநில சுற்றுலா பட்டியலில் இருந்தும் தாஜ்மகால் நீக்கப்பட்டிருந்தது.
அதேவேளை பாரதீய ஜனதா சட்ட மன்ற உறுப்பினர் ஒருவர் தாஜ்மகால் இந்தியாவின் களங்கம் எனவும் இதற்கு இந்திய வரலாற்றில் இடம் கிடையாது எனவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு இனம் தெரியாத நபர் ஒருவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மேற்கொண்ட தொலைபேசி அழைப்பில் தாஜ்மகாலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது எனவும் சிறிது நேரத்தில் அது வெடிக்கும் எனவும் தெரிவித்துள்ளர்h.
இதனை அடுத்து தாஜ்மகால் மற்றும் அதனை சுற்றியுள்ள வளாகப்பகுதிய முழுவதும் வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது. ஏனினும் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை எனவும் இது ஒரு போலியான மிரட்டல் எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.