2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் 7ம் திகதி அறிவிக்கப்படும் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி இடம்பெற்ற போது 2 ஜி ஸ்பெக்ட்ரம் எனப்படும் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மற்றும் சில நிறுவன நிர்வாகிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
குறித்த வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் நடைபெற்று வருகின்ற நிலையில் இந்த வழக்கின் தீர்ப்புத்திகதி இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், 2ஜி ஊழல் வழக்கின் தீர்ப்பு திகதி நவம்பர் 7ஆம் திகதி அறிவிக்கப்படும் என சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்துள்ளார். தீர்ப்புடன் கூடுதல் ஆவணங்களை சேர்க்க வேண்டிய பணிகள் நடப்பதால் தீர்ப்பு தேதி அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதென நீதிபதி தெரிவித்துள்ளர்h.