போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சென்னையில் பறக்கும் புகையிரதத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வழியாக எண்ணூர் வரையில் 4 கட்டமாக இத்திட்டத்தை படிப் படியாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. முதல் கட்டமாக சென்னை கடற்கரை – மயிலாப்பூர் இடையே பறக்கும் புகையிரத சேவை 1997-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது.
சிலபகுதிகளில் இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், குறித்த திட்டம் சில ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது இந்தப்பிரச்சினைக்கு நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்டுள்ளது. எனவே, அடுத்த ஆண்டுக்குள் பணிகள் முடிக்கப்பட்டு புகையிரத சேவை ஆரம்பிக்கப்படும் என தெற்கு புகையிரத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இத்திட்டம் செயல்படுத்தினால் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன் வீதி விபத்துக்களையும் குறைக்க முடியும் என்பதுடன் கட்டணங்களும் குறைக்க்ப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.