152
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள காட்டுலை கிராமத்தில் நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் திருமண தொடர்பான சடங்குகள் நடத்துவதற்காக சென்று கொண்டிருந்த வேளை வீதி ஓரமாக இருந்த டிரான்ஸ்போர்மர் வெடித்து சிதறியதில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்த நிலையில் 16 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 9 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் உயஜரிழப்பு 14 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Spread the love