வடகிழக்கு பருவமழையின்போது எதிர்பார்க்கப்பட்டதைவிட 93 சதவீதம் அதிகமான மழை சென்னையில் பெய்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் தமிழகம் முழுவதற்குமான மழை வீழ்ச்சி எதிர்பார்ததைவிடவும் 8 சதவீதம் குறைவாகவே மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பருவம் பிந்தி, கடந்த மாதம் 27ஆம் திகதி தொடங்கியது. கடந்த 2015 ஆம் ஆண்டு பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கைத் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை பொதுமக்களை அச்சப்படுத்திருந்தது. இம்முறையும் ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த ஆண்டு கடந்த 140 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் வறட்சி ஏற்பட்டதுடன் பருவ மழை பொய்த்துப் போனது. இதேவேளை இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்தபோதும் சென்னையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை வீழ்ச்சி குறைவாக பெய்தது.
இம்முறை வடகிழக்கு பருவமழையின்போது தமிழகம் முழுதும் எதிர்ப்பார்க்கப்பட்ட மழை அளவு 21 சதவீதம் என்றும் பெய்தது 19 சதவீதம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இதன் பிரகாரம் எதிர்ப்பார்த்ததை விடவும் 8 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளதாகவும் சென்னையில் எதிர்ப்பார்க்கப்பட்ட மழை அளவு 32 செ.மீ பெய்தது 62.3 செ.மீ. இது எதிர்ப்பார்க்கப்பட்டதை விட 93 சதவீதம் அதிகம் ஆகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களில் எதிர்பார்க்கப்பட்டதை விட 93 சதவீதம் அதிக அளவில் மழை குறைவாக பெய்தாலும் நீர் நிலைகள் 20 சதவீதம் மாத்திரமே நிரம்பி உள்ளதாகவும். சென்னையின் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கி வெள்ளமாகி வீணாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.