உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் தமிழக முதலரமச்சர் ஜெயலலிதாவை சந்திக்க விரைவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் தான் சென்னை செல்லவுள்ளதாக இந்திய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு தேவைப்படும் சகல உதவிகளையும் வழங்குமாறு சுகாதாரத் துறையிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதையடுத்து, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நிபுணத்துவம் பெற்ற குறிப்பிட்ட சில துறைகளின் மருத்துவர்கள் சென்னைக்கு அவ்வப்போது அனுப்பி வைக்கப்பட்டு நிலைமையைக் கண்காணித்து வருவதாகவும் மத்திய அரசுக்கு கிடைத்த தகவலின்படி,; ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தொற்று பரவக்கூடாது என்ற ஒரே காரணத்தால்தான் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவ குழு நீங்கலாக, வெளி நபர்கள் அவரை சந்திக்க தனியார் மருத்துவமனை அனுமதிக்கவில்லை எனவும் அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.