சிரியாவில் ரஷ்ய ராணுவத்தினர் மேற்கொண்ட வான்தாக்குதல் மற்றும் பீரங்கி தாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 26 பேர் கொல்ப்பட்டுள்ளனர் என கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.
சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள நகரங்களை மீட்க ரஷ்யாவுடன் இணைந்து சிரியா ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தநிலையில் கிழக்கு சிரியாவில் ஈராக் எல்லையில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள அபு கமல் என்ற நகரத்திளை சிரிய ராணுவத்தினர் நேற்று மீண்டும் முழுமையாக கைப்பற்றியிருந்தனர்.
இந்நிலையில், அந்நகரை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்ய ராணுவத்தினர் அப்பகுதியில் வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல்கள் மக்கள் முகாம்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இரண்டு முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களில் 9 குழந்தைகள் உட்பட 26 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளது. சிரியாவில் நடந்துவரும் போரினால் இதுவரை சுமார் 3 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது