190
புனர்வாழ்வு ஆணையாளர் நாயகத்தின் அலுவலகத்தினை சட்டமாக்குவதற்கான சட்ட மூலம் ஒன்றைத் தயாரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தவறான நடத்தை கொண்ட ராணுவத்தினர், தீவிரவாத அல்லது அழிவு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள், போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் போன்றவர்களுக்கு புனர்வாழ்வளித்து, அவர்களை சமூகத்துடன் இணைக்கும் நோக்கில் இந்த அலுவலகம் உருவாக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான யோசனைகளை அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், முன்வைத்துள்ள நிலையில் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love