அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை தேர்ந்தெடுப்பது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக நாளை டெல்லியில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் கூடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக உள்ள ராகுல் காந்தி பதவி உயர்த்தப்பட்டு கட்சியின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்ற கட்சியின் சிரேஸ்ட தலைவர்களின் விருப்பத்துக்கமைய தீபாவளி பண்டிகைக்கு பிறகு அவர் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டெல்லியில் நாளை காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடுகிறது.
சோனியா இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியின் சிரேஸ்ட தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ள நிலையில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் திகதி அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து, ராகுல் காந்தி தலைவர் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்வார் எனவும் அவரை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யாவிட்டால், ராகுல் ஒருமனதாக புதிய தலைவராக அறிவிக்கப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.