குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மிகவும் தீர்மானம் மிக்கதோர் ஆளும் கட்சி கூட்டமொன்று இன்றைய தினம் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று மாலை நடைபெறவுள்ள இந்த விசேட கூட்டத்தில் நாளை ஆரம்பமாக உள்ள நாடாளுமன்ற அமர்வுகள் மற்றும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செய்து கொண்டுள்ள உடன்படிக்கை தொடர்பிலும் இன்றைய கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love
Add Comment