
நல்லொழுக்கம், வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்,
வடமாகாண பொதுமக்களில் 99 வீதமான மக்கள் நல்லொழுக்கம் கொண்டவர்கள் சட்டத்தை மதித்து நடக்கின்றவா்கள் ஒரு வீதமானவா்கள் செய்யும் செயற்பாட்டை வைத்துக்கொண்டு வடமாகாண மக்கள் அனைவரையும் மதிப்பிடமுடியாது என வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் தெரிவித்தார் .
இன்று(11) கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் வடக்கு மாகாணத்தில் இலங்கை பொலீஸ் சேவைக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட வேலைவாய்ப்பு வெற்றிடங்கள் காணப்படுவதாகவும், அதனை வடக்கு வாழ் தமிழ் இளைஞர் யுவதிகளை நிரப்புமாறும் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சர் இதன் போது அழைப்பு விடுத்துள்ளார்
18-28 வயதுடைய க.பொ.த சாதாரன தரத்தில் கணிதம் தமிழ் உள்ளிட் ஆறு பாடங்களில் சித்தியடைந்த ஆண் பெண் இருபாலாரும் குறித்த பொலிஸ் சேவையில் இணைய முடியும் எனவும், தெரிவித்த அவா் தமிழ் பொலீஸாரின் பற்றாக்குறையினால் தமிழ் மக்கள் அதிகம சிரமப்படுவதாகவும் எனவே தமிழ் மக்களின் சிரமங்களை தவிர்த்துக்கொள்ளும் பொருட்டு தமிழ் இளைஞர் யுவதிகள் பொலீஸ் சேவையில் இணைந்துகொள்ளுமாறும், அவ்வாறு இணைந்துகொள்பவர்களுக்கு வடக்கு மாகாணத்தில் பயிற்சி வழங்ப்படுவதோடு, குறைந்தது பத்து வருடங்களுக்கு வடக்கு மாகாணத்தில் அவா்கள் சேவையாற்ற நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்த வட மாகாண சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சர்
பொலீஸாரின் பற்றாக்குறை காரணமாக கிளிநொச்சி மாவட்ட பொலீஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 90 ஆயிரம் மக்கள் வாழ்கின்றனா். இந்த மக்கள் தொகைக்கு பொறுத்தவரை பொலீஸாரின் எண்ணிக்கை 550 மக்களுக்கு ஒரு பொலீஸாா் என்ற நிலைமையே காணப்படுகிறது. எனவும் தெரிவித்தாா்.
பட்டதாரிகள் உதவி பொலீஸ் அத்தியட்சர் பதவிக்கு விண்ணபிக்க முடியும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தாா்.
Add Comment