நவீன காலத்தில் ஏனையோரை ஒடுக்குதல் வழக்கத்துக்கும் புதியதொரு பாணியாகவும் மாறிவிட்டது எனவும உலகின் ஒவ்வொரு பிராந்தியத்திலும் அடிப்படை உரிமைகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவில் நேற்றையதினம் ஆரம்பமாகிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 37ஆவது அமர்வில் ஆரம்ப உரை ஆற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உலகல் தற்பொழுது வெட்கமென்பது இல்லாமல் போய் விட்டது எனவும் வெளிநாட்டவர்கள் மீதான வெறுப்பு இனவாதம் ஆகியன ஐரோப்போவிலும் அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிரியாவிலும் மியான்மாரிலும் எல் சல்வடோரிலும் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களைச் சுட்டிக்காட்டிய சயிட் அல் ஹூசெய்ன் இன்னமும் பணியாற்ற வேண்டிய தேவை உள்ளதெனவும் வலியுறுத்தியுள்ளார்.
குறித்த அமர்வில் இலங்கை தொடர்பிலும் ஆராயப்படவுள்ள போதிலும் உயர்ஸ்தானிகரின் ஆரம்ப உரையில் இலங்கை பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Add Comment