வர்தா புயல் நாளையதினம் இந்தியாவின் தெற்கு ஆந்திரா மற்றும் சென்னைக்கு இடையே கரையை கடக்க உள்ளதால், எண்ணூர் துறைமுகத்தில் 10ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் கடலூர், நாகப்பட்டினம் துறைமுகங்களில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளன.
மேலும் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை பெய்து அதிக பாதிப்பு ஏற்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர். பி. உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், வட தமிழக கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் 2 நாட்களுக்கு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை கடலூர், நாகப்பட்டினம் துறைமுகங்களில் 8ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
குறிப்பாக வர்தா புயல் நாளை தெற்கு ஆந்திரா மற்றும் சென்னைக்கு இடையே கரையை கடக்க உள்ளது. இதனால் 2 நாட்களுக்கு வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் பலத்த காற்று வீசக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் இருந்து 450 கிமீ தொலைவில் வர்தா புயல் மையம் கொண்டிருப்பதாகவும்இ இதனால் ஆந்திர வடகடலோர பகுதிகளில் 36 மணி நேரத்தில் பலத்த மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.